கனடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கிறிஸ்துமஸ் தினதன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுபற்றி அனிதா ஆனந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். அனிதா ஆனந்த் ட்விட்டர் பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்! கனடியர்களுக்காக நாம் இணைந்து பணியாற்றுவது தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த நாள் குடும்பத்துடன் இணைந்து அற்புதமான நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.