Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் ஸ்பெஷல்” ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா…!!

நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் சூர்யா வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகி தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். நேருக்கு நேர் என்ற திரைப்படம் வழியாக தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் தன்னை தானே வடிவமைத்து கொண்டு சிறந்த நடிகராக வளர்ந்துள்ளார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா நேற்று அவரது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருடைய ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில்#HappyBirthdaySuriya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நேற்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு “சூரரைப்போற்று” படக்குழுவினர் காட்டு பயலே என்கின்ற பாடலை வெளியிட்டுள்ளனர். அதோடு நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

Categories

Tech |