Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மெய்யப்பன்-மலர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலருக்கு விநாயக் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு மலர் குளிப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தஸபோது குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மலர் தனது குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு விநாயக்கை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |