பேருந்து நிலையத்தில் வைத்து பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் மதுவை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் ஒரு மாதமே ஆன கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.அந்த பெண் குழந்தைக்கு வாயில் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானத்தை குடித்து குழந்தையை அடித்துள்ளார். இதனை பார்த்து வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணை பிடித்து விசாரித்த போது குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆவது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் 2 கிலோ 600 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்து ஒரு மாதம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அந்த பெண் போதையில் தள்ளாடியபடி அது எனது குழந்தை என கூறிக் கொண்டே நடந்து கீழே விழுந்தார். அந்த பெண் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பெண் குழந்தைக்கு தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகளிர் போலீசார் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.