பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் இருக்கும் சாக்கடையில் தொப்புள் கொடியுடன் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.