கத்தாரில் கொரோனா வைரஸால் 3 வார குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்நிலையில் பொது சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றால் இறந்த குழந்தைக்கு வேறு எந்த விதமான மருத்துவ அறிகுறியும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்ரால் பலியான 2-வது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரும் கொரோனா தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றனர். பொதுவாக கொரோனா குழந்தைகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், உலகம் முழுவதிலும் தொற்று காரணமாக குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.
தற்போது கத்தாரில் தொற்று பரவலால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தொற்றின் ஒரு வகையான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகின்றது. யுனிசெப் கொடுத்த தகவலின்படி உலக அளவில் கொரோனா தொற்றால் 3.5 மில்லியன் இறப்புகளில் 0.4 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது. அவற்றில் 9 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.