பிறந்த 80 நாளான குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டரை லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, அம்பது மேல் நகரத்தில் வசிக்கும் வசந்த்-அகல்யா என்ற தம்பதிக்கு பிறந்த 80 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்