Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம்…. தண்ணீரில் மூழ்கடித்த பாதிரியார்…. கதறிய பெற்றோர்…!!

பிறந்த குழந்தைக்கு ஆபத்தான முறையில் ஞானஸ்நானம் செய்த பாதிரியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

சைப்ரஸ் நாட்டில் உள்ள லிமாசோல் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேவாலயத்தில் வைத்து என்டினா என்பவரது குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் இருந்த பாதிரியார் அழுது கொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையை நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் மூழ்கடித்து ஞானஸ்னானம் செய்தார். இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதோடு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட பெற்றோர் பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது நாங்கள் அனைவரும் ஜாக்கிரதை என்று எவ்வளவோ அவரிடம் கதறினோம். ஆனால் ஞானஸ்நானத்திற்கு அவர்தான் பொறுப்பு என்று கூறினார். குழந்தை சிவப்பாக மாறியதும் அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் அந்த அழகிய தினத்தை பாழாக்கிவிட்டார் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிரியார் குழந்தையின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு தொலைக்காட்சி ஒன்றில் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |