குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது பொதுவாக பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு. அதனை சிலர் ஜாதகங்களை பார்த்து அதில் பரிந்துரைக்கப்படும் எழுத்திற்கு ஏற்ப பெயர் வைப்பார்கள். ஆனால் ஒரு குழந்தைக்கு அவர்களின் பெற்றோரின் விருப்பமான சிற்றுண்டி பெயரை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது லண்டனை சேர்ந்த தம்பதி பிறந்த குழந்தைக்கு பக்கோடா என பெயர் வைத்துள்ளனர்.இது அவர்களுக்கு பிடித்தமான சிக்கன் பக்கோடா ஆர்டர் செய்து சாப்பிட்டு எடுக்கப்பட்ட முடிவு என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். தி கேப்டியன்ஸ் டேபிள் என்னும் உணவகத்தில் இந்த உணவு ஆடர் செய்யப்பட்டதால் , அந்த அறிவிப்பை அந்த உணவகமே இணையத்தில் ஷேர் செய்துள்ளது.