Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சோகம்… பதபதைக்க வைக்கும் காட்சி…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் தெரு நாய்கள் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தையைக் கவி சென்று செல்வதை கண்ட பொதுமக்கள் நாயைத் துரத்தியதில் குழந்தையைப் போட்டுவிட்டு நாய் அங்கிருந்து சென்று விட்டது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாகப் போடுவதாகவும் மருத்துவ கழிவுகள் இப்பகுதியில் கொடுத்ததாகவும் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குப் பலமுறை தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பகுதியில் எங்களால் குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலின் பேரில் திட்டக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் குழந்தையைக் கைப்பற்றிக் குழந்தையை யாருடையது. மேலும், இப்பகுதியில் குழந்தையை வீசிச் சென்றது யாரெனப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தெருநாய்கள் குழந்தையைக் கவ்வியபடி தெருக்களில் சுற்றித் திரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |