பிறந்த குழந்தையை பெற்ற தாயே குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையிலுள்ள கொழும்புத்துறை எனும் இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு திருமணத்திற்கு முன்பு பிறந்த குழந்தையை குழி தோண்டி புதைத்துள்ளார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிறந்ததை கண்டறிந்து அவரிடம் குழந்தை இல்லாததால் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டு புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.