Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்த சிறிது நேரத்தில் பலியான குழந்தை…. செவிலியர்கள் மீது புகார்…. உறவினர்கள் சாலை மறியல்….!!

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதால் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் நிறைமாத கர்பிணியான துர்காவை பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துர்காவின் உடல்நிலையும் மோசமானதால் மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே துர்காவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு சென்று செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தையின் உடலை வாங்காமல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனையறிந்த குமார பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதற்கு பின்னரே அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

Categories

Tech |