நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று. இவருக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்ம உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், அரசியல் பிரமூகர்களும், உலகத் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்த நாளில் எனது தாயை சந்தித்து ஆசிப்பெறவில்லை என்றாலும் பழங்குடியின, கடினமாக உழைக்கும் தாய்மார்களின் வாழ்த்து கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடந்த மகளிர் சுய உதவிக்குழு மாநாட்டில் பேசிய அவர், “ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனது தாயின் பாதங்கள் தொட்டு ஆசிப்பெறுவது வழக்கம் இன்று பணி நிமித்தமாக சந்திக்கவில்லை. ஆனாலும் லட்சக்கணக்கான தாய்மார்கள் என்னை ஆசீர்வதித்துள்ளதால் எனது தாய் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” என்றார்.