Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் அன்று…. சடலமாக தொங்கிய புதுப்பெண்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பொழிச்சலூர் வேதாசலம் நகரில் பெயரான சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாமுவேல் அதே பகுதியில் வசிக்கும் தனுஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது பிறந்தநாள் அன்று வெளியே அழைத்து செல்லுமாறு தனுஜா சாமுவேலிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் வெளியே அழைத்து செல்லாமல் போதையில் வீட்டிற்கு வந்ததால் மன உளைச்சலில் இருந்த தனுஜா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |