தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி, தன் குடும்பத்துடன் செல்பி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக கட்சியின் தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான விஜயகாந்த் 68 வயது முடிந்து தனது 69வது வயதை தொடங்குகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்தநாள் செல்பி என்று வளையத் தளத்தில் பதிவு செய்துள்ளார்.