Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த 2 மாதமே ஆன குழந்தை…. பால் கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவர் பண்ருட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 2 மாதமே ஆன யோகமித்ரன் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் புஷ்பலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் புஷ்பலக்ஷ்மி தனது குழந்தையை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |