Categories
தேசிய செய்திகள்

பிறந்த 9 மாத குழந்தையை… தூக்கி சென்ற இளைஞர்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் விளையாட தூக்கி செல்வதாக கூறி ஒன்பது மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாரின் குர்ஜா தேஹாத் என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு ஒன்பது மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் வீட்டின் அருகே உள்ள இளைஞர் ஒருவர் அந்த குழந்தையுடன் அடிக்கடி வந்து விளையாடி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞன் அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் வராததால் குழந்தையின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அங்கு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்துள்ளார். அங்கிருந்து அந்த இளைஞர் தலைமறைவானார். குழந்தையை உறவினர்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இளைஞனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |