Categories
உலக செய்திகள்

பிறப்புறுப்பை வெட்டி வீசிய நபர்… போதையால் நடந்த விபரீதம்… வீட்டில் இந்த பொருளை கைப்பற்றிய காவல்துறை..!!

ஜெர்மனியில் ஒரு நபர் கஞ்சா போதையில் தன் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கஞ்சா போதையில் இருந்ததால் கத்தியால் தன் பிறப்புறுப்பை தனியாக வெட்டி வீசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பின்பு வீட்டிலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பிறப்புறுப்பை உடலில் மீண்டும் இணைப்பதற்கான அறுவை சிகிச்சையை அவருக்கு உடனடியாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் அவரின் வீட்டில் சோதித்தபோது அவரின் ஆணுறுப்பு மற்றும் கஞ்சா எடுக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் சவரம் செய்யும் கத்தியை பயன்படுத்தி அவர் தன் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கஞ்சா போதையில் இருந்ததால் இவ்வாறு செய்ததாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இதனையடுத்து அவரின் பிறப்புறுப்பை மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சைக்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும் அவரது உடலில் பிறப்புறுப்பை மீண்டும் இணைக்க முடியுமா? என்று உறுதியாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |