Categories
மாநில செய்திகள்

பிறப்பு சான்றிதழ் இல்லையா..? உடனே இத பாத்து ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க…!!

பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

உலகில் மனிதன் பிறப்பதிலிருந்து வாழும் காலம் வரை அவருக்கு பிறப்பு சான்றிதழ் என்பது எப்பொழுதும் தேவைப்படும். இதை குலைந்து பிறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வருடம் கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். https://etownpanchayat.com/publicservices/Birth/ApplyBirth.aspx

  1. இதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து உங்களின் விவரம், குழந்தையின் விவரம், மனைவியின் விவரம், முகவரி விவரம், என அனைத்தையும் நிரப்ப வேண்டும்.
  2. பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  3. தொடர்ந்து உங்களது தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஒப்புகை எண் வரும் அதை கொண்டு மீண்டும் Birth Certificate Search ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.
  4. பின்னர் அதில் கேட்கும் கூடுதல் தகவல்களை கொடுத்து ஜெனரேட் ஆப்ஷனை கொடுக்க வேண்டும். பின்னர் பிறப்புச் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |