பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதள வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்திய நாட்டிலுள்ள அனைவருக்குமே கண்டிப்பாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவை. ஒரு குழந்தை பிறந்து 14 நாட்கள் ஆன உடனே கண்டிப்பாக பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்து விட வேண்டும். அதேபோன்று ஒருவர் இறந்த பிறகு 7 நாட்கள் கழித்து கண்டிப்பாக இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த 2 சான்றிதழ்களையும் மத்திய அரசின் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தற்போது ஆன்லைன் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை https://Chennai corporation.gov.in/gcc/online-services/ birth- certificate/என்ற இணையதள முகவரியிலும், பிற இடங்களில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com. publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள முகவரிகளும் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்ற பிறகு birth certificate search என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டு, சான்றிதழ் எந்த மொழியில் வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விட்டு, generate என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.