உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
உலகிலேயே சீன அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் குழந்தைகள் பிறப்புவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு, தம்பதியருக்கு 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்த நிலையில் பெரிதான மாற்றம் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் ஆயுள்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கின்றது. கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 26 கோடியே 40 லட்சமாக உள்ளது. மேலும் சீனாவின் அங்கமாக உள்ள திபெத்தில் உயரமான நிலப்பரப்பு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அங்கு மக்களின் ஆயுள்காலம் 1951-ல் 35.5 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அது 72.19 ஆண்டுகளாக இருக்கின்றது.