Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனவும் https://bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |