Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிபந்தனை இல்லாமல் வழங்கப்பட்டு வருவதால் இந்த உதவி தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் தொழில் படிப்பு பயலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த உதவி தொகை பெறுவதற்கு நவம்பர் 10ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |