Categories
தேசிய செய்திகள்

பிற நாட்டுக்கும் உதவி செய்யும் இந்தியா….. பாராட்டி தள்ளிய வெள்ளை மாளிகை….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்தியா தனது மிகச் சிறப்பான உற்பத்தி திறன் காரணமாக தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது. உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கியமான நாடாகும். இது இந்தியாவிற்காக கூறவில்லை, இது மிகவும் முக்கியமான விஷயமாகும். மேலும் குறைந்த மற்றும் நடுத்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து இலவச தடுப்பூசிகளை கிடைக்க செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |