Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸில் இளம் பெண் கடத்தல்… நாய் கூண்டில் அடைக்கப்பட்ட பின் தப்பி ஓட்டம்…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பம்பாங்கா மாகாணத்தில் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு இளம்பெண் ஒருவர் அவர் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கொண்ட வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தி செல்லப்பட்டார் என போலீஸிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீஸர் கடத்தப்பட்ட பெண்ணை தேடி வந்தனர் அந்தப் பெண் காணாமல் போனதை அடுத்து அவருடைய காதலனிடம் இரண்டு லட்சம் டாலர்கள் தரும்படி கேட்டு மிரட்டல் வந்துள்ளது.

மேலும் அவரது ஃபோனில் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து வீடியோ ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கடத்தப்பட்ட அவரது காதலி பேஸ்பால் மட்டையால் அடிக்கப்படுவது படமாக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடத்தப்பட்ட அந்த சீனப் பெண் தப்பி சென்றுள்ளார் அவர் ஒரு கடையில் ஷாப்பிங் செய்யும்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சீனாவின் சாங்காய் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட பெண் போலீஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அதன் பின்  தான் 20 நாட்கள் நாய் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீஸிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரை கடத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டவர்கள் தப்பித்துள்ளனர் இருப்பினும் அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சில தலையனைகள் மற்றும் சிவப்பு வாளி அடங்கிய நாய் கூண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |