பிலிப்பைன்ஸ் தாக்கிய புயலால் 100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை கடந்த வாரம் நால்கே என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை அதிலும் குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியுள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த புயலைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இடைவிடாது பெய்த கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளகாடாகியுள்ளது.
மேலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியது இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இந்த சூழலில் புயல் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் இன்னும் 31 பேரை காணவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.