Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை புரட்டிய சூறாவளி… சுழன்றடித்த வீடுகள்… 16 பேர் பலியான சோகம்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி புயல் தாக்கியதால் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை கோனி என்ற சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. கேட்டண்டுவானஸ் மாகாணத்தை மிகக் கடுமையாக தாக்கிய சூறாவளி புயல், அதன் அருகே உள்ள அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்தன, வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து சென்றன. புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அந்த சூறாவளி புயலால் 13 ஆயிரம் குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேரை காணவில்லை. பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வருடம் தற்போது வரை வந்த சூறாவளிப் புயல் இதுவே மிக சக்தி வாய்ந்த புயல் என்று கூறப்படுகின்றது. அந்தப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 225 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது.

Categories

Tech |