தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நெருப்புவளையம் என அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதினால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லூசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு லூசோன் பிராந்தியம் முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸின் அதிபர் பெட்டினான்ட் மார்க்கோஸ் ஜூனியரின் சொந்த மாகாணமான லோகோஸ் நோட்டோவின் தலைநகர் லாவோக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் நிலநடுக்கத்தில் சேதம் அடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து அந்த விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல் லோகோஸ் நோட்டோ மாகாணத்தின் படாக் நகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்ரா மாகாணத்தில் உள்ள பாஸ் நகரில் நூற்றாண்டு பழமையான தேவாலயம் இடிந்து சேதமடைந்தது ககாயன் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் சேதுமடைந்திருப்பதால் அங்குள்ள பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உட்பட ஏராளமான கட்டிடங்கள் இருந்து விழுந்தது இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.