பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து வெள்ளம், பணிச்சரிவு, நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 72 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸில் சுமார் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் காடுகள் அழிப்பு காரணமாக வெள்ள பாதிப்பு கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.