Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிலிப்பைன்ஸ் நாட் டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் உயிரிழப்பு”… பெற்றோர் கோரிக்கை…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை அருகே இருக்கும் இழுப்பப்பட்டியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள இனுங்கூர் மேலாண்மை துறை விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர் சென்ற 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விசாகனை சந்தித்து மனு அளித்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “எனது மகன் பிரதீப் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தவோ என்னும் இடத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். சென்ற 19ஆம் தேதி பிரதீப் உடன் படிக்கும் மாணவர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு பிரதீப் இறந்துவிட்டதாக கூறினார். இதனால் நானும் என் வீட்டில் உள்ளோரும் அதிர்ச்சி அடைந்தோம். ஆகையால் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் எனது மகன் பிரதீப் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதுபற்றி கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஆட்சியர் மனுவை பெற்றுகொண்டார். வெளிநாடுவாழ் நலன் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனரிடம் தொலைபேசியில் தகவலை தெரிவித்தார். பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை எனது மகன் உடல் பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருக்கின்றது. ஆகையால் அவனுடைய உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Categories

Tech |