ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14வது சீசனில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யினர் துபாய்க்குச் சென்று உள்ளனர். அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தோனி, தீபக் சஹாருடன் பில்லியர்ட்ஸ் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.