ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளக்ஸ் பேனரில் கோரிக்கை எழுதி வந்ததால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி அருகே இருக்கும் மேற்கு பகுதியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக பணியாற்றி வருகின்றார்.
இவர் செல்லம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே மனு கொடுத்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கோரிக்கையை மனுவாக எழுதி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் வருவாய் அலுவலரிடம் கொடுத்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.