திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவியின் தற்கொலை காரணம் தெரிந்த பிறகே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்த நிலையில் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.