தமிழகத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் ஆகவே இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியல் ஆக இன்று காலை 11 மணி முதல்இணையதளத்தில் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தமாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நவம்பர் 11ஆம் தேதி மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.