தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 43 ஆயிரத்து 533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆறாம் தேதி தொடங்கியுள்ளது. மாணவ மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி வரை நடைபெற்ற உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 1 தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வு வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வை கண்காணிக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று தொடங்கிய பிளஸ் ஒன் பொதுத்தேர்வில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வில் 2 பேர் முறைகேடு செய்துள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.