பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஐஐடி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் பொருள்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகள் இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள் அனைத்து மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவது போல தொடர்ந்து ஐஐடி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியால் ஐஐடி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.