Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார்.

இதனால் போலீசார் அந்த மாணவரை கைது செய்து கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தார்கள். இந்நிலையில் வழக்கு தொடர்பாக அந்த மாணவரை அவரது சித்தப்பா கனகனகந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளம்வழுதி கொலைப்பற்றி காவல்துறைக்கு சொல்லாமல் மோட்டார் சைக்கிளில் வைத்து சுற்றிக்கொண்டு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |