Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த மாணவி…. 8 மாத கர்ப்பம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முதுகுளம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளதால் மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உதய குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் உதயகுமாரை கைது செய்து மாணவியை பலாத்காரம் செய்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |