பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நாளை பிற்பகல் 3 மணி முதல் பிளஸ் ஒன் விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து.
மேலும் மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விருப்பம் கொள்பவர்கள் அதற்குரிய விண்ணப்பத்தையும் பதிவிறக்கம் செய்யலாம். வருகின்ற ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.