Categories
தேசிய செய்திகள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவரா?…. உடனே அப்ளை பண்ணுங்க!…. 5,000 காலிப்பணியிடங்கள்….!!!!

மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள், பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. மேலும் எஸ்எஸ்சி ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியாளர் தேர்வாணையம்:-

Staff Selection Commission

தேர்வு:-

Combined Higher Secondary (10+2) Level Examination 2021

காலிப்பணியிடங்கள்:- 5000

* பணி:-
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

சம்பளம் – ரூ.19,900 முதல் 63,200 வரை

* பணி:-
Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம் – ரூ.25,500முதல் 81,100 வரை

தகுதி – பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* பணி:-
Data Entry Operator (DEO)

சம்பளம் – ரூ.29,200 – 92,300 வரை

* பணி:-
Data Entry Operator, Grade ‘A’

சம்பளம் – ரூ.25,500 – 81,100 வரை

தகுதி – கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு – 01.01.2022 தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை – சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – ரூ.100 ஆகும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் – 07.03.2022.

ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் – 08.03.2022.

Categories

Tech |