Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. 15 நாட்களுக்கு முன் புதிய அட்டவணை…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இதனையடுத்து மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான புதிய அட்டவணை தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பு அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுகள், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும். செய்முறை தேர்வு மதிப்பெண்களை 24ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

Categories

Tech |