பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஏற்படும் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சரியானது என்று கூறினார், சிபிஎஸ்இ 10, 12ஆம் பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பாமக தன் குரல் கொடுத்தது.
அந்த வகையில் மத்திய அரசு நடவடிக்கை பாமகவுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.கொரோனா தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் சிபிஎஸ்சி போன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.