Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு….. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்….. வேலூர் கடைசி இடம்….!!!!

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது.

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அதிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |