Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொது தேர்வு நடத்தப்படுமா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” நடப்பாண்டில் 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அரசின் அனைத்து செயல்களையும் குறை சொல்வதை மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்பட்டு, தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் திறப்பதில் ஆந்திரா மற்றும் கேரளாவை தமிழகத்துடன் ஒப்பிட வேண்டாம்.

மாணவர்களின் நலன் மற்றும் பெற்றோர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும் தான் அரசு பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவராகும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப் பட்ட பின்னர் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு முடிவெடுக்கும். அதன்பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |