நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும், 11ஆம் வகுப்பு தேர்வுகளிலிருந்து 30 சதவீத மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை வைத்து ஜூலை 31-க்குள் மதிப்பெண் கணக்கிட்டு மாணவர்களுக்கு பிளஸ் டூ மார்க் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.