Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு…. கல்வி வாரியம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அம்மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. 10 முதல் 12 ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் பிளஸ் டூ படித்த 1.3 லட்சம் மாணவர்களில் 92.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |