Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிளஸ்2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை பணத்தை ஏமாற்றியதாக பெற்றோர் புகார்”… போலீஸார் இளைஞரிடம் விசாரணை…!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறி நகை, பணத்தை பறித்ததாகஇளைஞர் மீது பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அகிலா (17) என்ற மாணவி பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் பெற்றோர் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்களின் மகளிடம் காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் இரண்டு லட்சம் பணம் மற்றும் தங்க சங்கிலி ஒன்றை ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.

அறியாத வயதில் எங்களின் மகளிடம் மோசடி செய்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அந்த இளைஞரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.

Categories

Tech |