Categories
உலக செய்திகள்

பிளாட்பாரத்தில் துணி விற்கும் சர்வதேச அம்பையர்….. ஏன் இந்த கதி…. வைரலாகும் புகைப்படம்….!!!

பிளாட்பாரத்தில் பிரபல அம்பையர் துணி விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவருக்கு ஏன் இந்த நிலைமை என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூத் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பின்னர் அம்பையராக பரிணமித்தார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பயராக செயல்பட்ட இவர் மீது சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக மும்பை காவல்துறை இவர் மேல் வழக்கு பதிவு செய்தது. ஆனால் தன் மீதான குற்றசாட்டுகளை மறுத்த ஆசாத் ரவூப் விசாரணைக்காக இந்தியா வரவும் மறுத்துவிட்டார்.

இந்த வழக்கில் இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ இவருக்கு ஐந்தாண்டு தடை விதித்தது. மேலும், சர்வதேச அம்பயர் குழுவிலிருந்து ஐ.சி.சியும் இவரை விடுவித்தது. இதன் காரணமாக இவரது அம்பயர் பயணம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஆசாத் ரவூப் பாகிஸ்தானின் லாகூர் நகர லன்டா பஜார் மார்க்கெட்டில் துணி மற்றும் வியாபாரம் செய்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |