Categories
மாநில செய்திகள்

பிளானை மாற்றி CMRL….. கோயம்பேடுக்கு தான் அதிக மவுசு…… வெளியான தகவல்….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் விரைவான பயணத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையி நீலம் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டம் மெட்ரோ திட்டத்தில் ரூ.61,841 கோடி மதிப்பில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்கள் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரைகிறது. Phase-2 திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வசதி கிடைக்கும். அதாவது அடையாறு, மாதவரம், கிரீன்வேஸ் ரோடு, ராயப்பேட்டை, புரசைவாக்கம், பூந்தமல்லி, போரூர், கலங்கரை விளக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் சென்று வர முடியும்.

இந்நிலையில் Phase-1, Phase-2 ஆகிய இரண்டு மெட்ரோ திட்டங்கள் ஒன்றிணையும் மிக முக்கிய நிலையமாக கோயம்பேடு மாற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் பச்சை வழித்தடமான கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் வழியாக ரயில் பயணிக்கிறது. அதனை போல இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் சிவப்பு வழித்தடமானது திருமங்கலம், கோயம்பேடு 100 அடி சாலை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றின் வழியாக செல்லுமாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் கோயம்பேடு போல நகர் பேருந்து நிலையம் மெட்ரோவை தவிர்த்து விட்டு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வழியாக செல்லும் சிவப்பு வழிதடத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதாவது ஒரே ரயில் நிலையத்தில் இரண்டு வழி தடங்களும் ஒன்றின் மேல் ஒன்று அமையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகக் குறைந்த அளவை நிலம் கையகப்படுத்த வேண்டி வரும். மேலும் Phase-1, Phase-2 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்று சேரும் முக்கிய இடமாக கோயம்பேடு மாறும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பயணிகள் எளிதில் ஒரு வழிதடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு கோயம்பேட்டில் மாறிக்கொள்ள முடியும் கோயம்பேடு புறநகர் நிலையம் மெட்ரோவை பொருத்தவரை அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். விரைவில் கீழம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாற்றப்பட்டு விடும். இதன் மூலம் CMBT க்கான முக்கியத்துவம் குறைந்துவிடும். எனவே கோயம்பேடு மெட்ரோ நிலையம் வழியாக ரயில்களை இயக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் திட்டமிட்டு இருப்பதால் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |