Categories
மாநில செய்திகள்

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க!…. கண்களால் சைகை காட்டும் அமர் பிரசாத்… அண்ணாமலை காலில் விழுந்த மாணவி…. வைரல் வீடியோ….!!!!

பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க கட்சியை வளர்க்க பல முயற்சிகளில் இறங்கி வருகிறார். இவர் செய்யும் செயல்கள் கட்சியிலுள்ள மேல்மட்ட தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என ஒரு புறம் இருந்தாலும், தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 2024ல் பா.ஜ.க-வை தமிழகத்தில் பெரும் கட்சியாக உயர்த்த வேண்டும் என்று அவர் பல முயற்சிகளிலிருந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகிறது. அண்மையில் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இந்த நிலையில் நீட்தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவி, தனக்கு மருத்துவர் சீட் கிடைக்குமா என எண்ணி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்துள்ளார். அப்போது அண்ணாமலை அம்மாணவியின் முழு படிப்புச்செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக பத்திரிகையாளரின் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனால் அந்த மாணவி தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பேட்டியளித்திருந்தார். அத்துடன் நீட்தேர்வு சுலபமானது எனவும் விடா முயற்சியுடன் படித்தால் வெற்றியடைலாம் என்றும் மாணவி கூறியிருந்தார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இச்செயலை பலர் பாராட்டி வந்த நிலையில், இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது வீடியோவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நீட்தேர்வில் வெற்றி பெற்ற மாணவியிடம் கண்களால் சிக்னல் கொடுத்து அண்ணாமலையின் காலில் விழ சொல்கிறார். அந்த மாணவியும் உடனடியாக அவரின் காலில் விழுகிறார். அப்போது காலில் விழவேண்டாம் என்று அண்ணாமலை அந்த மாணவிக்கு அட்வைஸ் கூறினார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் எல்லாமே ஸ்கிரிப்ட்தானா என்று இணையவாசிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |